Friday, October 19, 2012

சிவகாமி நடராஜனின் நவராத்திரி கொலுவுக்கு ஒரு அழைப்பு

அழைப்போர்,
இடுப்பொடிய படி செய்தவரும் (நடராஜன்)
அடுக்கடுக்காய் அணிவகுத்தவரும் (சிவகாமசுந்தரி)
மிடுக்காய் உதவியவர்களும் (ஸ்ருதி, அதிதீ மற்றும் ஹரிஷ்)

நவராத்திரி கொலுவிற்கு வாருங்கள்
வண்ண வண்ண வர்ணங்கள் காணுங்கள்
 
எங்கள் கொலுவில்
தமிழ் கலாச்சார திருமணம் பாருங்கள்

விருந்தினர் யார் ? யார் ?
முதலில் நீங்கள்!!!

அருகில் மணமக்கள் வீட்டாருடன்
அமீரகத்து உடை அணிந்த
மணமகனின் நண்பர் மனைவியுடன் வந்திருக்க

செவிக்கு உணவாய்
பாட்டு பாடுவோர்
நம் இசையாம்
நாதஸ்வரமும் மேளமும்
காற்றில் கலந்து வர

சமையலுக்கு
செட்டியார் செட்டிச்சியின்
காய் கனிகள்
உற்றார் உறவுக்கு விருந்தளிக்க

இருபுறமும் மணமக்களை காண வந்தோரின்
விலை உயர்ந்த வாகனங்கள் (உபயம் கடைக்குட்டி ஹரிஷ்)

உங்களை வீட்டு
வாண்டுகளை மகிழ்விக்க
காட்டு விலங்குகள்
தங்கள் குட்டிகளுடன்
அணிவகுப்பு...

தசாவதாரம் கமலின் படம் அல்ல
எங்கள் கொலுவில்
இறைவனின் அவதார
அணிவகுப்பின் அழகை
வாயால் எப்படி சொல்ல
வந்து பாருங்கள் மெல்ல
ஊரெல்லாம் சொல்ல...

கண்ணன் மழலை சிரிப்புடன்
அம்மன்களில் பல,
படிகளில் அணிவகுப்பு...

பல வடிவங்களில் விநாயகர்
தம்பி முருகருடன்
அருள் பாலிக்க
வரன் பெற்றிடுங்கள்
எங்கள் கொலுவில்..

அதிசயித்து பார்க்க
சாய்ந்த பிசா கட்டிடம் (Pisa Tower)
உயர்ந்த ஐபில் (eifil tower)பாரிஸில் இருந்து
விண்ணை தொடும் நம் புர்ஜ் க்ஹலிபா (Burj Khalifa)
எகிப்தின் பிரமிட் (Pyramid) அதிசயம்
உங்கள் வாய் பிளக்க வைத்திடும் ...

பிளந்த வாய்க்கு
கிண்டலுடன்
சுண்டலும் உண்டு
வாண்டுகளுடன்
வாருங்கள்
எங்கள் கொலுவிற்கு ....


இங்ஙனம் அழைப்போர்,

 இடுப்பொடிய படி செய்தவரும் (நடராஜன்)
அடுக்கடுக்காய் அணிவகுத்தவரும் (சிவகாமசுந்தரி)
மிடுக்காய் உதவியவர்களும் (ஸ்ருதி, அதிதீ மற்றும் ஹரிஷ்)
 

No comments:

Post a Comment